ஜோடி ஜோடியாக திருட கிளம்பும் காதலர்கள்! என்ஜினியரிங் காதல் ஜோடி கைது – போலீஸ் ஷாக்

அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு இளம் ஆணும், பெண்ணும் மிக கேஷுவலாக வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்வது பதிவாகியிருந்தது

By: November 25, 2019, 6:31:14 PM

சென்னை வளசரவாக்கத்தில் உறவினர் வீடுகளில் போலி சாவியை கொண்டு கொள்ளையடித்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் பாண்டியன். அங்குள்ள செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்த ஜெகதீஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருக்கிறார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெகதீஷ், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.


உடனே விசாரணையில் இறங்கிய போலீசார், அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு இளம் ஆணும், பெண்ணும் மிக கேஷுவலாக வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்வது பதிவாகியிருந்தது.

வீடியோவை பார்த்த உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து, அந்த நபர் தனது உறவினர் மகன் என தெரிவிக்க போலீஸும் ஷாக்கிவிட்டனர். இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் கோயம்பேட்டை சேர்ந்த கார்த்திகேயன், மேலும் மதுரவாயலை சேர்ந்த அவரது காதலி நித்யா ஆகியோரை கைது செய்தனர்.

காதலர்கள் இருவரும் இன்ஜினியரிங் பட்டதாரிகள் ஆவர். சொந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கொள்ளையடிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. உறவினர் வீடுகளுக்கு நலம் விசாரிக்க செல்வது போன்று சென்று பணம், நகை வைக்கும் இடங்களை தெரிந்து கொண்டு தொடர்ந்து கொள்ளையடித்து வந்துள்ளனர்.

குறிப்பாக, பழக்கத்தின் மூலம் அவர்கள் வீட்டு சாவியை எங்கே வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொண்டு நேக்காக திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் காதலுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற காதலி, சாலையில் சென்ற பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்து சென்று போலீசிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai engineering love couples arrested for theft valasaravakkam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X