Advertisment

சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடத்த அனுமதி; நிபந்தனைகளுடன் ஐகோர்ட் உத்தரவு

சென்னையில் தீவுத் திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
Balaji E
New Update
Madras High court order police not to chase public from beach and park at nights Tamil News

சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடத்த அனுமதி - ஐகோர்ட் உத்தரவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் தீவுத் திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

இந்தியாவில் முதல் முறையாக ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் கார் பந்தயம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளன. முதலில் இந்த பார்முலா 4 கார் ரேஸ் பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இந்த போட்டிக்காக தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்தது.

இதனால், சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் பந்தயம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக இந்த பார்முலா 4 கார் ரேஸ் பந்தயம்,  தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

அதே நேரத்தில், சென்னை அருகே இருங்காட்டுக்கோட்டையில் தனி பந்தய தளம் இருக்கும் நிலையில், வீதி பந்தயம் என்கிற பெயரில் தீவுத்திடல் உள்ளிட்ட சென்னை மாநகரின் பிற பகுதிகளில் கார் பந்தயத்தை நடத்தப்படுகிறது. அவற்றுக்கு தடை விதிக்கக் கோரி ஸ்ரீஹரீஷ், லூயிஸ் ராஜ், மதுரைவீரன், பாலுசாமி என்பவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். 

சென்னை தீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடைகோரிய மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் நடைபெற்றன.

இந்த வழக்கில், மனுதாரர்கள் சார்பில், கார் பந்தயம் நடத்த அரசு ரூ. 42 கோடி ரூபாயை செலவு செய்வது தவறு என்றும் சட்ட அனுமதியின்றி இந்த கார் பந்தயம் நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்த பார்முலா கார் பந்தயம் காரணமாக அரசுக்கு எந்த பலனும் லாபமும் இல்லை என்பதால் இந்த போட்டிக்குத் தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.மேலும், கார் பந்தயம் நடைபெறும் தீவுத் திடல் சாலை அருகே மருத்துவமனை, ராணுவ தளம் ஆகியவை அருகிலே இருப்பதால், அதற்கான அனுமதி பெறவில்லை என்று கூறப்பட்டது.

இதற்கு, தமிழ்நாடு அரசு தரப்பில், பார்முலா கார் பந்தயம் நடத்துவது என அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதால் இதை நீதிமன்றம் ஆராய முடியாது என்றும் இந்த பந்தயத்திற்காக அரசு குறைவாகவே செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 


இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, , சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

அதோடு, இந்த பார்முலா 4 கார் பந்தயத்துக்காக அரசு அளித்த ரூ. 42 கோடி அரசுக்குத் திரும்பி அளிக்க வேண்டும் எனப் இந்த கார் பந்தயத்தை நடத்தும் தனியார் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பந்தயத்திற்கான முழு செலவையும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment