சென்னையில் கூடுதலாக 100 புதிய சிற்றுந்துகள் விரைவில் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை வாரியத்தில் போக்குவரத்து துறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், ’தமிழகம் முழுவதும் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வு கூட்டத்திற்குபின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது,
ஆய்வு கூட்டத்தில் விபத்துகள் தடுக்கவும், விபத்துகளை குறைக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விபத்துக்கள் தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விபத்துகளை தடுக்க உரிமங்கள் வழங்குவதில் கட்டுபாடுகள் விதிப்பது குறித்த பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது அதிவேகமாக வாகன ஓட்டுவர்கள் மீது அதிகபட்சமான நடவடிக்கை என்ன நடக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. விபத்து இல்லாத தமிழகமாக மாற்றப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் ஏற்கனபே 200 சிற்றுந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் நெரிசல் உள்ள இடங்களில் கூடுதலாக 100 சிற்றுந்துகள் புதியதாக விரைவில் இயக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.