சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி பாலியல் தொந்தரவுக்கு உட்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்திற்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போரூரை அடுத்த மத நந்தபுரத்தை சேர்ந்த பாபு என்பவரது 6 வயது மகள் ஹாசினி. இவர் தனது நண்பருடன் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று மாயமானர்.
இது குறித்து மாங்காடு காவல்நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். குழந்தையை கடத்தி பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்ததாக அந்த குடியிருப்பில் இருந்த தஷ்வந்த் என்ற வலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தந்தை சேகர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அடிப்படை ஆதாரம் இல்லாமல் மனதை ஒருநிலை படுத்தாமலும் காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.எனவே தன் மகனுக்கு எதிராக கடந்த மார்ச் 20-ம் தேதி பிறப்பித்த குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் செல்வம் மற்றும் கலையரசன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி காவல் ஆணையரிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய முடிவு எடுக்காமல் காலதாமதம் செய்ததால் மனுதாரரின் உரிமை பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே இவருக்கு எதிராக பிறப்பிக்க பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.