டிடிவி தினகரனின் நீட் எதிர்ப்பு கூட்டதிற்கு உயர் நீதிமன்ற கிளை அனுமதி

நீட் தேர்வுக்கு எதிராக டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

TTV Dinakaran, CM Edappadi Palanisamy, AIADMK, O Panneer selvam, Sasikala,

நீட் தேர்வுக்கு எதிராக டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு போராடிய அனிதா, நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் ஆங்கங்கே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அனிதாவின் உயிரிழப்புக்கு மத்திய – மாநில அரசுகள் தான் பொறுப்பு என குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகளும் போராட்டம், பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதேசமயம், நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக போட்டிக் கூட்டங்களை கூட்டங்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில் நீட் தேர்வுக்கு எதிராக செப்டம்பர் 12-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன்அறிவித்திருந்தார். ஆனால், நீட் போராட்டம் தொடர்பான வழக்கில் போராட்டம் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாக முதலில் தகவல் வெளியானது. இதையடுத்து, தினகரனின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர், “சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை நீதிமன்றம் உணர்ந்தே இருக்கிறது” என தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிராக வருகிற 16-ம் தேதி திருச்சி உழவர் சந்தையில் பொதுக் கூட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவித்தார். ஆனால், உழவர் சந்தை மைதானத்தில், தேசிய சிறுபான்மையினர் கழகம் சார்பில், இரண்டு நாட்களுக்கு கூட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளதால், கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனவே, செப்டம்பர் 19-ம் தேதிக்கு தனது பொதுக் கூட்டத்தை டிடிவி மாற்றினார். அன்றைய தினத்துக்கு அனுமதி கோரி திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை எதிர்த்து, டிடிவி தினகரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய தினகரன் தலைமையில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai hc madurai bench gave permission to conduct ttv dhinakarans protest against neet

Next Story
இரட்டை இலை யாருக்கு? அக்.,31-க்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவுelection 2019 tamilnadu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com