லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமனம்: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு லஞ்சம் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையர் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு லஞ்சம் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக ஜெயக்கொடி நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக ஜெயக்கொடியை கடந்த 2-ம் தேதி தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், லஞ்சம் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் பதவியை கூடுதல் பொறுப்பாக உள்துறை செயலாளர் கவனித்து வந்தார். இந்நிலையில் குட்கா விவகாரத்தையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை, இத்துறைக்கு தனியாக ஆணையர் நியமிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து தமிழ்நாடு மின்நிதி கட்டமைப்பு மேம்பாட்டு தலைவராக இருந்த ஜெயக்கொடியை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டு, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக அரசு நியமனம் செய்துள்ளது.

இந்த நியமனத்தில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை, இது ஒரு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பதவி, இந்த பதவிக்கு வருபவரை ஆளுநர் நியமனம் செய்வார். ஆனால் இங்கு அது மீறப்பட்டுள்ளது. எனவே லஞ்சம் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும், இது ஒரு தன்னிச்சையான அமைப்பு, எனவே அதற்குரிய நபரை நியமிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜாரன மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இது 5 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட தன்னிச்சையான விசாரணை அமைப்பு ஆகும். ஆனால் எந்த விதிகளையும் பின்பற்றாமல் இந்த நியமனம் செய்யபட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகும். இது போன்ற பதவிகளில் தேர்வு செய்யப்படும் நபர்கள் கூறித்து உச்ச நீதிமன்றம் பல வழிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால் அதை பின்பற்றாமல் பணி இட மாறுதல் மூலம் அரசு இந்த பதவியை நியமிப்பது சட்டவிரோதமானது எனவே இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அரசுத்தரப்பில் ஆஜாரன தலைமை வழக்கறிஞர் முத்துக்குமார சாமி, ஜெயக்கொடி நியமனத்தில் விதிமீறல் இல்லை எனவும், தகுதி, அனுபவம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்துதான் அவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த பதவி நியமனமாக இல்லாமல், பணியிடமாற்ற உத்தரவாக பிறப்பிக்கப்பட்டது ஏன் என அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

×Close
×Close