Advertisment

ப்ளூ வேல் விளையாட்டு: தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது உயர் நீதிமன்ற கிளை

ப்ளூ வேல் விளையாட்டால் மதுரை மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இது தொடர்பான வழக்கை தாமாக முன் வந்து உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு எடுத்துள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Blue Whale challenge, madurai

ப்ளூ வேல் விளையாட்டால் மதுரை மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இது தொடர்பான வழக்கை தாமாக முன் வந்து உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு எடுத்துள்ளது.

Advertisment

உலக அளவில் சிறுவர்கள், இளைஞர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் "ப்ளூ வேல் சேலஞ்" எனப்படும் விளையாட்டு, ரஷ்யாவில் தோன்றியது. இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் பலர், உளவியல்ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்த விளையாட்டின் இறுதிக்கட்டம், தற்கொலைக்குக் கூட்டிச்செல்வதால், விளையாட்டில் மூழ்கிய ஏராளமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யா‌ மற்றும் ஐரோப்‌பிய நாடுகளில் இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கியுள்ள இந்த "ப்ளூ வேல்" விளையாட்டு, தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை பலி வாங்கி வருகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் ஆறு சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் 16 வயது இளைஞர் மனோஜ், ப்ளூ வேல் விளையாட்டினால் அண்மையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ப்ளூ வேல் கேம் அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க பெற்றோருக்கு உதவும் பள்ளிகள்

இந்த விளையாட்டை தடைசெய்ய வேண்டும் எனப் பல எதிர்ப்புக் குரல்கள் வலுக்கத் தொடங்கின. இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நிதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ப்ளூ வேல் விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய இணையதள நிறுவனங்களுக்கு அறிவிப்புகள் வெயியிடப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர், கடந்த 30-ம் தேதியன்று தனது படுக்கை அறையில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் இவர் ப்ளூ வேல் விளையாட்டை விளையாடி வந்து இறுதியில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வேறொரு வழக்கு விசாரணையின் போது, புளூவேல் மரணம் குறித்து தான் வழக்கு தொடர விரும்புவதாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "நீங்கள் தனியாக வழக்கு தொடரத் தேவையில்லை இப்பிரச்னை குறித்து நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. வருகிற திங்கள் கிழமையன்று வழக்கு விசாரணை நடைபெறும்" என்றனர்.

Madurai High Court Blue Whale Challenge
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment