Advertisment

சென்னை உயர்நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கூட்டம்: தலைமை நீதிபதி உத்தரவு

மே மாதம் நீதிமன்றங்கள்  செயல்படுத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்க ஏப்ரல் 29-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை கூட்டும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai high court chief justice ap sahi, chief justice ap sahi order to meeting of all justice, சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து நீதிபதிகள் கூட்டம், தலைமை நீதிபதி ஏபி சாஹி, all justice meeting, chennai high court, latest chennai high court news, latest tamil news, latest tamil nadu news, tamil news

சென்னை உயர் நீதிமன்றம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் மே 31 வரை கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மார்ச் இறுதி வாரத்திலிருந்து அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டு, அவசர வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக குழு நீதிபதிகள் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் மே மாதம் விடுமுறையை ஒத்திவைப்பதாக முடிவெடுக்கப்பட்டு அனைத்து நீதிமன்றங்களும் முழுவீச்சில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது

ஆனால், வழக்கறிஞர் சங்கங்கள் கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் எழுதிய கடிதத்தில் கீழமை நீதிமன்றங்களிலும் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் ஏப்ரல் 29-ம் தேதி காலை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை கூட்டும்படி தலைமை பதிவாளருக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டுள்ளார். அனைத்து நீதிபதிகளும் அவரவர் வீட்டிலிருந்து காணொளி காட்சி மூலம் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் ஆகியவற்றின் மே மாத கோடை விடுமுறை குறித்தும், நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment