தென்மேற்கு பருவமழை பெய்தபோது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்க ஆரம்பித்தது.
தமிழகம் மற்றும் ஆந்திரா இடையேயான நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆந்திராவில் இருந்து 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு 10 டி.எம்.சி.யை எட்டிவிடும். சமீபத்தில் பெய்த மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு 10 டி.எம்.சி.யை எட்டிவிடும்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும். இதில் தற்போது 9.459 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
தமிழகத்துக்கு தற்போது வினாடிக்கு 557 கன அடிகுடிநீர் வருகிறது. இதை வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிக்க ஆந்திர அரசிடம் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு 1.5 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது.
ஜனவரிக்குள் மீதமுள்ள 6.5 டி.எம்.சி.யை பெறுமாறு நீர்வளத்துறையிடம் ஆந்திர அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil