நியாயமான விலையில் தரமான உணவு வழங்கி வருவதால், உணவின் தரத்தை ஆய்வு செய்த தர கட்டுப்பாட்டு அமைப்பு, சென்னை மெரினா பீச் பகுதியில் அமைந்துள்ள கானாவூர் உணவகம் (சுந்தரி அக்கா கடை)க்கு உணவு தரச்சான்றிதழ் வழங்கியுள்ளது..
சென்னை போன்ற பெருநகரங்களில் ஓட்டல்களுக்கு சென்று மதிய உணவை சாப்பிட்டால், அதுவும் இன்றைய ஜிஎஸ்டி யுகத்தில், பில்லை பார்த்துமே பலருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்…
இந்நிலையில், நம் அனைவருக்குமே மதிய உணவை மீன், சிக்கன், கறி என சகலவிதமான சவுகரியங்களுடன் அதேநேரத்தில் தரம் குறைவில்லாமல், குறைந்த விலையில் வழங்குகிறது மெரினா பீச் அருகிலுள்ள சுந்தரி அக்கா கடை…
நான் சோறு நல்லா இருந்தா தான் சாப்பிடுவேன் இல்லைன்னா பட்டினி கூட கிடந்துருவேன். நானே இப்படி இருக்குறப்போ, காசு கொடுத்து சாப்பிர்றவங்களுக்கும் தரமான, உடம்புக்கு ஒண்ணும் செய்யாதவகையில் உணவு அளிக்கணும்னு இந்த கடையை நடத்திவருவதாக சென்னை ஸ்லாங்கில் கூறுகிறார் சுந்தரி அக்கா…
நெட்டிசன்கள் பாராட்டு : சுந்தரி அக்கா கடைக்கு பாமர மக்கள் மட்டுமல்லாது பலதரப்பு மக்களும் வந்து செல்கின்றனர். இந்த கடையின் புகழ் சமூகவலைதளங்களிலும் பரவியதை தொடர்ந்து பலரும் இன்னும் பலர் வரத்துவங்கியுள்ளனர்.