scorecardresearch

ஸ்டாலின், மேயர் பிரியாவுக்கு பணியாற்றிய ஜமேதார்; 39 ஆண்டுகள் பணியாற்றி நேற்று ஓய்வு பெற்றார்

1984 முதல் கடந்த 39 ஆண்டுகளுக்கு சென்னை மேயர்களுக்கான ஜமேதாராக பணியாற்றிய மது (வயது 60), நேற்று ஓய்வு பெற்றார்.

ஸ்டாலின், மேயர் பிரியாவுக்கு பணியாற்றிய ஜமேதார்; 39 ஆண்டுகள் பணியாற்றி நேற்று ஓய்வு பெற்றார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேயர் பிரியா உள்ளிட்டோருக்கு பணியாற்றிய ஜமேதார் (மேயர் உதவியாளர்) புதன்கிழமை ஓய்வு பெற்றார்.

1984 முதல் கடந்த 39 ஆண்டுகளுக்கு சென்னை மேயர்களுக்கான ஜமேதாராக பணியாற்றிய மது (வயது 60), நேற்று ஓய்வு பெற்றார்.

மது, முன்னாள் மேயர்களான எம்.கே.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சைதை துரைசாமி ஆகியோரிடம் பணியாற்றியவர். கடந்த ஒரு வருடமாக அவர் மேயர் பிரியாவுக்கு பணியாற்றி வந்தார்.

“மது தன் வேலையில் தன்னை அர்ப்பணித்து கருத்துடன் செயல்படுவார், மிகவும் அமைதியான நபர்”, என்று பிரியா கூறினார்.

மதுவின் குறிப்பிடத்தக்க தருணங்களில் ஒன்று, பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாதமும் கவுன்சில் கூட்டம் நடைபெறும். அப்போது ​​மேயர் கவுன்சில் மண்டபத்திற்குள் நுழையும்போதெல்லாம், அவர் மீண்டும் மீண்டும் “மேயர் வருகிருர்” என்று அறிவித்து வந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai mayor jamedar retires after 39 years of service

Best of Express