தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை மதியம் செய்தியாளர்களை சந்திதார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்திதிற்கு வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை தொடரும். சனி மற்றும் ஞாயிறு முதல் மழையின் அளவு குறைந்துவிடும்.

சென்னையைப் பொறுத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் கனமழை பெய்துள்ளது. மேலும், இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர் மாவட்டம் சோழிங்கரில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று கூறினார்.

×Close
×Close