சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் மீது கிரிமினல் வழக்கு: ஏன்? எதனால்?

Chennai Metro: இந்தியத் தொழில் தகராறுகள் சட்டத்தின்  (Industrial Disputes Act 1947) கீழ்  குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று அம்மனுவில் தெரிவித்துள்ளது.

சென்னை (மெட்ரோ ரயில் செய்திகள்): சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஊழியர் சங்கம்(சி.எம்.ஆர்.எல்) மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில்  எழுத்துப்பூர்வ மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், மாநில அரசு ,தொழிலாளர் ஆணையம் மற்றும்  மெட்ரோ ரெயிலின் நிர்வாக இயக்குனர் மற்றும்  பிற உயர் அதிகாரிகளுக்கு எதிராக இந்தியத் தொழில் தகராறுகள் சட்டத்தின்  (Industrial Disputes Act 1947) கீழ்  குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று அம்மனுவில் தெரிவித்துள்ளது.

ஏன் ? எதனால்?

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில்  தொழில்நுட்ப வல்லுநர், ரயில் ஆபரேட்டர், ஸ்டேஷன் கன்ட்ரோலர் மற்றும் ஜூனியர் இன்ஜினியர் என மொத்தம் 254 ஊழியர்கள் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தால் பணி நியமனம் செய்யப்பட்டனர்.  இந்த ஊழியர்கள் அனைவரும் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 30% வீட்டு வாடகைப்படியாகவும், 35% சிற்றுண்டியகப் படியாவகும் பெற்றனர்.

ஜனவரி 1, 2017  சம்பளத்தை மாற்றியமைத்த ​​சிஎம்ஆர்எல்  வீடுப்படியை  30 லிருந்து 24 சதவீதமாகவும், சிற்றுண்டியகப் படியை முழுவதுமாக நீக்கியது. இதனால் ஊழியர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ .8,960 15,580 ரூபாய் வரை குறைய ஆரம்பித்தது.  ஜூலை 21, 2018 சென்னை மெட்ரோ நிறுவனம் மேலும் ஒரு சுற்றறிக்கை மூலம்,  15 நாட்கள் தந்தைவழி விடுப்பு மற்றும் 20 நாட்கள் அரை ஊதிய விடுப்பு போன்ற சலுகைகளையும் ரத்து செய்தது.

‘Traffic’ ஷகுர் பானு : இரவில் மருத்துவமனை பனி… பகலில் போக்குவரத்தை சீர் செய்தல்.

இதனால் பல போராட்டங்களும்,சங்கங்களும் உருவாகின. சி.ஐ.டி.யு  இந்த மெட்ரோ விஷயத்தைக் கையில் எடுத்தவுடன் மெட்ரோ நிர்வாகம்  ஏழு அலுவலக பொறுப்பாளர்களை சேவையிலிருந்தே  நீக்கியது.  உதவி தொழிலாளர் ஆணையாளர் முன் சமரச நடவடிக்கைகள் நிலுவையில் இருந்தபோதும்,  நிர்வாகம் வேலைநிறுத்தம் தொடர்பாக மேலும் ஒன்பது தொழிலாளர்களை இடைநீக்கம் செய்திருக்கின்றது.

இதனால் தான், குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஊழியர் சங்கம் சென்னை மெட்ரோ நிர்வாக இயக்குனர் மற்றும்  பிற உயர் அதிகாரிகளின் மேல்  குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதில் அளிக்க மாறு  தமிழக அரசு,   தொழிலாளர் ஆணையம் மற்றும் மெட்ரோ நிர்வாகத்திற்கும் கோரியிருக்கிறது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close