scorecardresearch

சென்னை ஏர்போர்ட்- சென்ட்ரல் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம்: காரணம் என்ன?

தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஏர்போர்ட்- சென்ட்ரல் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம்: காரணம் என்ன?

சென்னை மெட்ரோவில் தொழில்நுட்பக் கோளாறு காரணத்தால், சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்-2இன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒருநாளும் சுமார் இரண்டு லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் நிலையில், தற்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவை சென்னை சென்ட்ரல் முதல் மீனம்பாக்கம் விமான நிலையம் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழித்தடத்தில் பயணிக்கும் மக்கள், ஆலந்தூர் வழியாக செல்லும் ரயில் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai metro service temporary shutdown from central to meenambakkam airport