Chennai Tamil News: சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரே, காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
Advertisment
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரால் திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில், மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் கஃபே, அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு புதிய முயற்சியாகும்.
இந்த கஃபே-வின் அறிமுகம், சென்னை மக்களிடையே புதிய அனுபவத்தை கொடுப்பதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வாய்ப்பும் வாழ்வாதாரமும் அளிக்கிறது.
அருங்காட்சியகத்திற்கு மேலே அமைக்கப்பட்டிருக்கும் கஃபே-வில், பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமைக்கவும் பேக் செய்யவும் பயிற்சியளித்து வேலை வழங்குகின்றனர்.
இதைப்பற்றி கஃபே-வில் பணிபுரியும் ஊழியர் யுவராஜ் கூறியதாவது:
"இந்த கஃபே மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்கு வருகைத்தரும் வாடிக்கையாளர்களுக்காக பல வசதிகள் அமைத்துள்ளனர், குறிப்பாக சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கான சாய்வு தளம், லிப்ட் போன்றவை இங்கு உள்ளது. மற்ற கஃபே-க்களில் இதுபோன்ற வசதிகள் காண்பது கடினமாகும்" என்று கூறுகிறார்.
இந்த கஃபே-வில் சமோசா முதல் சிக்கன் டிக்கா ரோல் வரை அனைத்து விதமான பேக்ட் உணவுகள் கிடைக்கின்றன.
மெரினா கடற்கரையை கஃபே பால்கனியில் இருந்து பார்த்தபடி இங்கு கிடைக்கும் உணவுகளை சுவைத்து மகிழும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இங்கு பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் திறமையை கௌரவித்த மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil