கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி; மருந்து நிறுவன பணியாளர் ரசாயனம் குடித்து பலி

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது மருந்து பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் ரசாயணம் குடித்ததால் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

By: Updated: May 9, 2020, 06:45:25 PM

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது மருந்து பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் ரசாயணம் குடித்ததால் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

சென்னையைச் சேர்ந்த மருந்துப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் சுஜாதா பயோடெக். இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகள், இருமல் மருந்துகளை விற்பனை செய்கிறது.

இந்த நிறுவனத்தின் முதலாளி டாக்டர் ராஜ்குமாரும் அந்த நிறுவனத்தின் பணியாளர் சிவநேசனும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, டாக்டர் ராஜ்குமாரின் வீட்டில் பெட்ரோலை சுத்திகரிக்கும் ரசாயனம் குடித்ததில் பாதிக்கப்பட்டு பணியாளர் சிவநேசன் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார் கூறியதாவது, சுஜாதா பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ராஜ்குமாரும், அவரது பணியாளர் சிவநேசனும் கொரோனா வைரஸுக்கு ஒரு மருந்து கண்டுபிடிக்க முயன்றனர்.

வியாழக்கிழமை, சிவநேசன் டாக்டர் ராஜ் குமார் ஆகியோர் நைட்ரிக் ஆக்சைடு மற்றும் சோடியம் நைட்ரேட் கலவையில் கோவிட்-19க்கு மருந்து தயாரிக்கும் திட்டம் இருப்பதால் ராஜ்குமார் இல்லத்தில் சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் இந்த சோதனையி வெற்றி பெற்றால் நிறுவனம் பெரிய அளவில் பயனடையும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

இதையடுத்து, இந்த சோதனையின்போது இருவரும் சோடியம் ஹைட்ரேட்டை உட்கொண்டனர். இது ரசாயனங்கள் மற்றும் சோப்புகள் தயாரிப்பிலும், பெட்ரோலிய சுத்திகரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.

கோவிட்-19 சிகிச்சைக்காகவும், உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தவும் இந்த கலவை பயன்படுத்தப்படலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ரசாயனத்தை உட்கொண்டதால் இருவரும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கே வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் சிவநேசன் உயிரிழந்தார். சிகிச்சைக்குப் பிறகு டாக்டர் ராஜ்குமார் உடல்நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளது.

இந்த சோதனையில் உயிரிழந்த 47 வயதான சிவநேசன், சுஜாதா பயோடெக் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக சுமார் 27 ஆண்டுகளாக பணி புரிந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவநேசன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், ராஜ்குமார் வீட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக ஆய்வகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சோதனைக்காக அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai pharma firm owner and employee try to invent new medicine for covid 19 pharma firm employee dies

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X