அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கொலை மிரட்டல் கடிதம்; போலீஸார் விசாரணை

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே.சூரப்பா அலுவலகத்துக்கு வந்த கொலை மிரட்டல் கடிதம் தொடர்பாக சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே.சூரப்பா அலுவலகத்துக்கு வந்த கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த கடிதம் தொடர்பாக சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். துணை வேண்தர் சூரப்பாவுக்கு வந்த கடிதம் குறித்து, போலீஸ் வட்டாரம் கூறுகையில், “அக்டோபர் 22ம் தேதி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகத்துக்கு துணை […]

Tamil News Today Live

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே.சூரப்பா அலுவலகத்துக்கு வந்த கொலை மிரட்டல் கடிதம் தொடர்பாக சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே.சூரப்பா அலுவலகத்துக்கு வந்த கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த கடிதம் தொடர்பாக சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். துணை வேண்தர் சூரப்பாவுக்கு வந்த கடிதம் குறித்து, போலீஸ் வட்டாரம் கூறுகையில், “அக்டோபர் 22ம் தேதி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகத்துக்கு துணை வேந்தர் சூரப்பாவுக்கு வந்த கொலை மிரட்டல் விடுத்து வந்த கடிதத்தில், கடிதம் அனுப்பிய நபர் தன்னை வீரப்பன் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றபடி அதில் அனுப்பியவரின் முகவரி ஏதும் குறிப்பிடவில்லை.

மேலும், அந்த கடிதத்தில், துணை வேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து அளிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தை திரும்பப் பெறாவிட்டால், அவர் கொலை செய்யப்படுவார் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளது.

துணை வேந்தர் சூரப்பா இந்த விஷயத்தில் ஒருதலைபட்சமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கு சாதகமாக இல்லை என்று மாநில அரசு கூறியிருந்தது.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த கடிதம் தொடர்பாக, துணை வேந்தர் அலுவலகத்திலிருந்து புகாரைப் பெற்றதாகவும் தேவையான சட்டபூர்வமான கருத்தைப் பெற்ற பிறகே காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றனர். மேலும், துணை வேந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய நபர் யார் என்று விசாரணை செய்து வருகிறோம் போலீசார் கூறுகின்றனர்.

துணை வேந்தர் சூரப்பாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய, அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் 507 (அநாமதேய தகவல்தொடர்பு மூலம் குற்றவியல் மிரட்டல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 506 (ii)ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai police fir registerd probing about threatening letter to anna university vice chancellor mk surappa

Next Story
பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? முதல்வர் பழனிசாமி பதில்nivar cyclone reliefs, cm edappadi k palaniswami announced relief, chennai, cuddalore, cyclone reliefs, நிவர் புயல் நிவாரணம் அறிவிப்பு, முதல்வர் பழனிசாமி, தமிழக அரசு, கடலூர், சென்னை, tamil nadu govt, cuddalore
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com