வீடியோ: அன்று அட்டகாசம்… இன்று கதறல், கண்ணீர்…

“எங்களை விட்டுவிடுங்கள், இனிமேல் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட மாட்டோம்”, என கெஞ்சும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

By: October 11, 2017, 1:38:27 PM

சென்னை மின்சார ரயிலில் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பயணம் செய்து பயணிகளை பீதியில் ஆழ்த்திய சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் போலீசாரிடம் அழுதுகொண்டு, இரு கைகளையும் கும்பிட்டு “எங்களை விட்டுவிடுங்கள், இனிமேல் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட மாட்டோம்”, என கெஞ்சும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு கடந்த 6-ஆம் தேதியன்று மாலை 4 மணியளவில் புறநகர் ரயில் வந்துகொண்டிருந்தது. பட்டாபிராம் ரயில் நிலையம் வந்தபோது, 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை நடைமேடையில் தேய்த்தபடி வந்தனர்.

பட்டாக்கத்தி தேய்க்கப்பட்டதால் வெளிவந்த நெருப்பு பொறியைக்கண்டு நடைமேடையில் நின்றுகொண்டிருந்த பயணிகள் பீதியில் அலறினர். இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

இந்த வீடியோ அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில், அம்மாணவர்களை பிடிக்க கடந்த திங்கள் கிழமை பட்டாபிராம் காவல் நிலையத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். அப்போது, காவல் துறையினர் நிற்பதை கவனிக்காத மாணவர்கள், அன்றும் பட்டாக்கத்தியை நடைமேடையில் தேய்த்தபடி வந்தனர்.

இதையடுத்து, அவர்களை சுற்றிவளைத்து காவல் துறையினர் கைது செய்தனர். பிடிபட்ட 4 பேர் சென்னை மாநிலக் கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அந்த 4 பேரும் காவல் நிலையத்தில், போலீசாரிடம் அழுதுகொண்டே கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai president college students crying in police station and asking for apologise

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X