Advertisment

ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை: விலை எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று முதல் தக்காளி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ. 60 விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

author-image
Vasuki Jayasree
New Update
தக்காளி

தக்காளி

சென்னையில் இன்று முதல் தக்காளி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ. 60 விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளில்  தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை குறையாத நிலையில், விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில்  அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சென்னையில் உள்ள 82  நியாயவிலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்படும்  என்று அறிவித்தார்.

நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படும் என்றும், தேவைக்கு ஏற்ப தக்காளி கொள்முதல் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment