சென்னை மின்சார ரயிலில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பயணம் மேற்கொண்ட மாணவர்களால், பயணிகள் பீதியடைந்தனர். பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்வது மட்டுமில்லாமல், ரயிலிலும் தற்போது தொங்கியபடி சாகச பயணத்தை செய்கின்றனர்.
Advertisment
பேஸ்புக்கில் பச்சையப்பன் “கல்லூரி பாரதிராஜா” என்ற கணக்கில், கடந்த 7-ம் தேதி மூன்று வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் திருடர்கள் மீது பயம் வைத்து பயணம் செய்யும் நிலையில், தற்போது மாணவர்களின் செய்யும் இதுபோன்ற ரவுடிசம் மக்களை மேலும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. ரயிலில் ஆயுதமுடன் பயணம் மேற்கொள்ளும் இந்த மாணவர்கள், நடைமேடையில் இருப்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுக்கின்றனர். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிந்த வீடியோக்களை நீக்கிவிட்டனர்.
Advertisment
Advertisements
இதேபோல பேருந்தில் பயணம் செய்யும்போது, கூட்டத்தில் சில சமயங்களில் படிகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைக் கண்டிருப்போம். ஆனால், இந்த மாணவர்களோ பேருந்தின் ஜன்னல் கம்பிகள் மீதும், பேருந்தின் மீதும் ஏறி பயணம் செய்கின்றனர். இதுபோன்று அட்டராசிட்டி செய்யும் மாணவர்களின் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
படியில் தொங்கிய படி பயணம் செய்யாதே என கூறும் நடத்துனர்களையும், ஓட்டுநர்களையும் மதிக்காமல், அவர்களையே மிரண்டும் வகையில் பேசும் சம்பவங்களும் நாள் தோறும் சென்னையில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்துவது என்பது காவல்துறைக்கு மட்டுமே முடிந்த விஷயம் என்பது பயணிகளின் கருத்தாக இருந்து வருகிறது. மேலும், வீடியோவில் அட்டகாசம் செய்யும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், மற்ற மாணவர்களும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சிறிது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேருந்து தினம் கொண்டாடுவதை போல இவர்கள் ரயில் தினத்தை கொண்டாடியதாக கூறப்படுகிறது.