Advertisment

சென்னை கே.கே.நகரில் 22-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்: மக்கள் கவனத்திற்கு!

இந்த பகுதியில் இன்று முதல் 22-ம் தேதி வரை மழைநீர் வடிகால் பணி நடைபெறுவதால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
traffic diversion

Chennai Traffic Diversion

சென்னை கே.கே., லட்சுமணசாமி சாலை மற்றும் சண்முகம் சாலை சந்திப்பு அருகே இன்று (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Advertisment

இந்த பகுதியில் இன்று முதல் 22-ம் தேதி வரை மழைநீர் வடிகால் பணி நடைபெறுவதால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, இரண்டாவது அவென்யூவில் இருந்து ராஜமன்னார் சாலை நோக்கி வரும் வாகனங்கள், பி.டி.ராஜன் சாலை மற்றும் ராஜமன்னார் சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும். திருப்பிவிடப்பட்ட வாகனங்கள் ராமசாமி சாலை மற்றும் ஆர்.கே.சண்முகம் சாலையை நோக்கிச் செல்லும்.

ராமசாமி சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ராமசாமி சாலை & ஆர்.கே.சண்முகம் சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும். மாற்றுப்பாதையில் செல்லும் வாகனங்கள் ஆர்.கே.சண்முகம் சாலை மற்றும் ராஜமன்னார் சாலை வழியாக செல்லும்.

பி.டி.ராஜன் சாலை மற்றும் ராமசாமி சாலை சந்திப்பில் இருந்து ராஜமன்னார் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முனுசாமி சாலை மற்றும் 80 அடி சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலைக்கும், பி.டி.ராஜன் சாலையிலிருந்து லட்சுமணசாமி சாலைக்கும் வரும் வாகனங்கள் தடை செய்யப்படவில்லை, என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Traffic Diversion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment