சென்னையின் மற்றொரு டூரிஸ்ட் ஸ்பாட் இது… கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் ஒரு பார்வை!

ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய அனைத்து முக்கிய சாலைகளிலிருந்து அணுகக்கூடிய வகையில் இருக்கும் இந்த கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் நகர்ப்புற சதுக்கம் அமைந்திருக்கிறது. இதனாலேயே ஏராளமான மக்களுக்கு  இளைப்பாறும் இடமாக அமைகிறது.

கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்

சென்னையில் சுற்றுலாத்தளத்திற்கும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் பட்டியலிடத் தொடங்கினால் அதற்கு முடிவே கிடையாதது போல் தோன்றும். அப்படிப்பட்ட பட்டியலில் தற்போது கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழே அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சதுக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. 14 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் நகர்ப்புற சதுக்கத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அன்று திறந்து வைத்தார்.

சென்னையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கத்திப்பாரா சந்திப்பில் பிரம்மாண்ட மேம்பாலம் 2008ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆசியாவிலேயே மிகப் பெரிய க்ளோவர் இலை வடிவில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் கீழ் காலியாக உள்ள 5,38,000 சதுர அடி பரப்பளவில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர முடிவு செய்யப்பட்டது.

கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி

ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய அனைத்து முக்கிய சாலைகளிலிருந்து அணுகக்கூடிய வகையில் இருக்கும் இந்த கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் நகர்ப்புற சதுக்கம் அமைந்திருக்கிறது. இதனாலேயே ஏராளமான மக்களுக்கு  இளைப்பாறும் இடமாக அமைகிறது.

பேருந்து நிறுத்துமிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், உணவகங்கள் மற்றும் விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்ட மல்டி மாடல் போக்குவரத்து மையம், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மூலம் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (CMDA) நிதியில் உருவாக்கப்பட்டுள்ளது.

கத்திப்பாரா மேம்பாலத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்

நகர்ப்புற சதுக்கம் 4 மண்டலங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கைவினைப் பொருட்கள் சந்தை, உணவகங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம் உட்பட இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. வணிக வளாகத்தில் மொத்தம் 56 கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையும் 200 முதல் 400 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன. இதில் 18 கடைகள் உணவு விற்பனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஒரே நேரத்தில் 128 கார்கள், 340 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்வையாளர்களுக்கு போதிய அளவு வாகன நிறுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற சதுக்கத்தின் வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள்

நகர்ப்புற சதுக்கத்தின் முழுப் பகுதியும் சூரியசக்தி விளக்குகள், நிலப்பரப்பிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட விளக்குகள் மற்றும் உயர்கம்ப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தற்போது கடைகள் திறக்கப்படாத நிலையில் இருப்பதால், வரும் நாட்களில் முழு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennais another tourist spot kathipara urban square

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com