/indian-express-tamil/media/media_files/GZPLddGfBIkvmFpNAxtl.jpg)
தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தீபாவளிப் போனஸ் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவுத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அனைத்து அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சிமற்றும் டிபிரிவு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 20% வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும். இலாபத்தில் பங்கு பெறக்கூடிய ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். தமிழக மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய துறைகளில் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சிமற்றும் டிபிரிவு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/NoTXbtm1jc
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 6, 2025
ஒதுக்கப்பட்ட உபரித் தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சிமற்றும் டிபிரிவு ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.3,000/- கருணைத் தொகையாக வழங்கப்படும்.
பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தகுதியின் அடிப்படையில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.8,400/- முதல் அதிகபட்சம் ரூ.16,800/- வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.இந்த அறிவிப்பின் மூலம் தமிழக அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,69,439 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுமார் ரூ.376.01 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.