இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன கப்பல் விரட்டியடிப்பு!

இன்று இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன கப்பலை, இந்திய கடலோர காவல்படை விரட்டியடித்துள்ளது

இன்று இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன கப்பலை, இந்திய கடலோர காவல்படை விரட்டியடித்துள்ளதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக சீன கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயற்சி செய்தது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இலங்கை விளக்கம்:

இச்சம்பவம் குறித்து இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘சீனக் கப்பல் பழுதுபார்க்க, கொழும்புவிலிருந்து கோவா செல்லும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது இந்திய கடற்படையின் சமிக்ஞைகளுக்கு பதில் தராததால், துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது’ என்றார்.

×Close
×Close