இதயங்களுக்கு இதம் சேர்த்தவர்… நினைவில் நீங்காத விவேக் காமெடி காட்சிகள்!

Actor vivek death: தனது நகைச்சுவையில் பெரும்பாலும் சமூக சீர்திருத்தக் கருத்துகளை உட்படுத்தி, ரசிகர்களைச் சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைப்பதே அவரின் நோக்கமாக இருந்தது.

சனங்களின் கலைஞன்’ நடிகர் விவேக் மறைந்தாலும் அவரின் நகைச்சுவை காட்சிகள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவை.தனது நகைச்சுவையில் பெரும்பாலும் சமூக சீர்திருத்தக் கருத்துகளை உட்படுத்தி, ரசிகர்களைச் சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை, சுய ஒழுக்கம் இல்லாமை, ஜாதி பாகுபாடு உள்ளிட்ட பல விஷயங்களின் விமர்சனத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இவருடைய நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றன. அவை மக்கள் மனங்களில் தாக்கத்தையும் ஏற்படுத்தின. அந்த வகையில் சில காட்சிகளை பார்ப்போம்.

ரன்

பெற்றோரை எதிர்த்து நண்பனை தேடி சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வரும் விவேக் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என அழகாக சொல்லப்பட்டிருக்கும். காக்கா பிரியாணி காமெடி முதல் 100 ரூபாய்க்கு கொடி பிடிக்கும் கூட்டம் முதல் அவரின் நகைச்சுவையும் அர்த்தமுள்ள கருத்துக்களும் அமைந்திருக்கும். சென்னைக்கு புதியதாய் வரும் ஒவ்வோர் இளைஞன் மனதிலும் இன்றளவும் இந்த சீன்கள் மனதில் ஓடும்.

காதல் சடுகுடு

வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் வரும் விவேக் தனது பாட்டி பறவை முனியம்மாவுடன் சேர்ந்து கிராமங்களில் கடைபிடிக்கும் மூட நம்பிக்கை சார்ந்த நிறைய விஷயங்களை மாற்றுவார். கருத்து கந்தசாமியாக பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்வது போன்றவற்றிற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்திருப்பார்.

சாமி

இந்த படத்தில் கலகம் செய்யும் பிராமணராக விவேக் அடித்த லூட்டி தமிழகத்தையே சிரிக்க வைத்தது. போலீசிடம் ஏழரை போட்டுக் காண்பித்தது, யானைக்கு பட்டை போடுவது, ஏரியாவிலேயே அரதப் பழசான ஒன்றைக் கொளுத்தி போகி கொண்டாடுவது என ஒரு ஆக்க்ஷன் படத்தில் தனக்கென ஸ்ட்ராங்காக ஒரு காமெடி பாதையில் பயணித்திருப்பார் விவேக். முக்கியமாக சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராக நிறைய கருத்துக்களை இந்த படத்தில் சொல்லுவார்.

திருமலை

வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிராக தன்னுடைய கதாபாத்திரங்களின் வழியாக சமூக சீர்த்திருத்தங்களுக்கான கருத்துக்களை அழுத்தமாக பேசியிருப்பார். நடிகர் விஜயுடன் இந்த படத்தில் இவர் நடித்த டேக் டைவர்ஷன் சீன் தற்போதைய காலத்திலும் பொருந்தும் அளவுக்கு இருக்கும்.

விஐபி

வேலையில்லா பட்டதாரி படத்தில் இந்த கால இளைஞர்களின் ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி நடித்திருப்பார் விவேக். இப்படத்தில் ‘அழகு சுந்தரம்’ என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார். மைன்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டு இருக்கிங்கனு தனஷூடன் இவர் செய்யும் காமெடிகள் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

சிங்கம்

இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். போலீஸ் விவேக்கை திருடன் இடுப்பில் தூக்கி வைத்து ஓடும் காட்சிகள், எரிமலை எப்படி பொறுக்கும் என்று விவேக் வரும் காட்சிகளை நினைத்துப் பார்த்தால் கூட உடனே சிரிப்பு வந்துவிடும். ஆட்டை திருடி பிரியாணி செய்து விவேக் செய்யும் ரகளை ரசிக்கும்படி இருக்கும். தன் எண்ணற்ற படங்கள் மூலம் ரசிர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை சகாப்தம் மறைந்தது திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chinna kalaivanar actor vivek death evergreen comedy videos

Next Story
அப்துல் கலாமின் இளவல்; பசுமைக் காவலர் விவேக்: கமல்ஹாசன், ரஜினிகாந்த் இரங்கல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com