சென்னை மாநகர 106வது போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
1990ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான விஸ்வநாதன் மதுரையில் எஸ்பியாகவும், உளவுத்துறை எஸ்.பி, டிஐஜி, சிபிஐயில் எஸ்.பி., டிஐஜி, கோவை மாநகர கமிஷனர், சென்னை கூடுதல் கமிஷனர், போக்குவரத்து துணை கமிஷனர் உள்பட பல்வேறு பதவிகள் வகித்தவர்.
இன்று காலை 10 மணிக்கு போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது, ‘பொது மக்கள் காவல்துறையினர் உறவு சுமூகமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் சேவைதான் பிரதானமானது பிரச்னைகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிகைகள், ஊடகங்களை மாதம் இருமுறை சந்திப்பேன்.முன்பிருந்த அதிகாரிகளின் நல்ல பணிகள் தொடரும்’ என்று அறிவித்தார்.
பதவி ஏற்பு விழாவின் போது கூடுதல் கமிஷனர்கள் சங்கர், சேஷசாயி, அ.கு.சங்கர், ஜெயராக், கணேசமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.