/tamil-ie/media/media_files/uploads/2017/05/a326.jpg)
பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது அவர், "தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தர பிரதமரிடம் கோரிக்கை வைத்து உள்ளேன். நீட்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டு கோண்டு உள்ளேன்.
கேரள பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன். பம்பா, அச்சன்கோவில் ஆறுகளுக்கு செல்லும் உபரிநீரை தமிழகத்துக்கு வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்க கோரிக்கை வைத்து உள்ளேன்.
குடிமராமத்துபணிக்கு ரூ.500கோடி நிதியை மானியமாக வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினேன். இலங்கை கடற்படை கைது செய்த 11 மீனவர்கள், 135 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன் .
தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் வைக்கப்பட உள்ளது. அப்படத்தை திறந்து வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து உள்ளோம். மேலும், சென்னையில் டிசம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்
ஆனால், அரசியல் ரீதியாக பிரதமருடன் எந்த விவாதமும் நடைபெறவில்லை. அரசின் சார்பாக அரசின் திட்டங்கள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.