“என்னது கம்பராமாயணம் எழுதுனது சேக்கிழாரா?”: முதலமைச்சர் பேச்சுக்கு நெட்டிசன்கள் கேலி

தமிழக அமைச்சர்களின் பேச்சுகள் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகிவரும் நிலையில், தற்போது அந்த வரிசையில் முதலமைச்சரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

By: November 30, 2017, 10:32:01 AM

தமிழக அமைச்சர்களின் பேச்சுகள் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகிவரும் நிலையில், தற்போது அந்த வரிசையில் முதலமைச்சரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, “மக்கள் சோப்பு உபயோகித்து குளிப்பதால் தான் நொய்யல் ஆற்றில் நுரை வருகிறது”, என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனும், “பிரதமர் மன்மோகன் சிங்”, என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதையும், நெட்டிசன்கள் கேலி செய்தனர்.

தஞ்சையில் நேற்று (புதன் கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போது விழாவி பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அம்மாவட்டத்தின் சிறப்புகள் குறித்து பேசினார். அப்போது, “காவிரி குறுக்கே கல்லணை கட்டிய கரிகால சோழன், கலை, இசை, நாட்டியம் ஆகியவற்றை உலகறிய செய்த இரண்டாம் சரபோஜி மன்னன், பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா, கணித மேதை ராமானுஜர், கம்பராமாயணம் தந்த சேக்கிழார், கர்நாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்களை தந்த பூமி இந்த தஞ்சை பூமி”, என பேசினார்.

இதில், கம்பராமாயணம் எழுதிய கம்பரை கூறாமல், “கம்பராமாயணம் தந்த சேக்கிழார்”, என கூறியுள்ளார். கம்பராமாயணம் என்ற பெயரிலேயே கம்பர் இருந்தும் முதலமைச்சர் தவறாக கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Cm edappadi palanisamy spoke ramayana written by sekkizhar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X