Advertisment

பாஜகவுடன் நெருக்கமா? 3-வது முறையாக பிரதமரை சந்திக்கும் பழனிசாமி!

ஓ.பன்னீர் செல்வத்திற்கே மோடி பக்கபலமாக இருக்கிறார் என்றே அரசியல் வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகின்றன....

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாஜகவுடன் நெருக்கமா? 3-வது முறையாக பிரதமரை சந்திக்கும் பழனிசாமி!

Chennai: Tamil Nadu Chief Minister 'Edappadi' K Palaniswami along with ministers during the swearing-in ceremony at Raj Bhavan in Chennai on Thursday. PTI Photo R Senthil Kumar(PTI2_16_2017_000191B)

சில நாட்களுக்கு முன்னர் தான் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரடியாக சந்தித்து பேசினார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்து இன்று பேசுகிறார். பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதற்காக இருவரும் பிரதமரை சந்திப்பதை ஒரு போட்டியாகவே கருதுவதாக கூறப்படுகிறது.

Advertisment

ஓ.பன்னீர் செல்வத்திற்கே மோடி பக்கபலமாக இருக்கிறார் என்றே அரசியல் வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க நேற்று இரவு 7.40 மணிக்கு விமானம் மூலம் டெல்லி வந்தார். அவருடன் அமைச்சர் தங்கமணி மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோரும் வந்திருந்தனர். இரவில் தமிழ்நாடு இல்லத்தில் அவர்கள் ஓய்வெடுத்தனர். தொடர்ந்து இன்று காலை 11.15 மணியளவில் பிரதமரை சந்திக்க உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பின்னர், பிரதமரை சந்திப்பது இது 3–வது முறையாகும். முதல் முறையாக கடந்த பிப்ரவரி 27–ம் தேதியும், 2–வது முறையாக ஏப்ரல் 23–ம் தேதியும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த சந்திப்பு?

கடந்த முறை முதல்வர் பழனிசாமி பிரதமரை சந்தித்த பிறகே, அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, டி.டி.வி.தினகரன் கைது போன்ற சம்பவங்கள் நடந்தன. இதனால் தமிழக அரசு தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டது. மத்திய அரசுக்கு எதிராக எதுவும் பேச வேண்டாம் என அமைச்சர்களுக்கு பழனிசாமி உத்தரவிட்டார்.

மேலும், ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய அ.தி.மு.க. அம்மா அணியின் ஆதரவை அக்கட்சி நாடலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், கேட்காமலேயே ஆதரவு அளிக்கும் சூழ்நிலையில் அ.தி.மு.க. அம்மா அணி இருப்பதாக தெரிகிறது.

மேலும், தமிழகத்தில் உள்ள வறட்சி நிலை குறித்தும், வறட்சி உள்ளிட்ட பிற தேவைகளுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் பிரதமரிடம், எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என தெரிகிறது.

முன்னதாக, தமிழகத்தில் பாஜக ஆட்சி நடப்பதாக திமுக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment