Election 2019 Live Updates: மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன.
அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இருபெரும் கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது செஞ்சியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
Web Title:Cm edappadi palaniswami mk stalin campaign live updates
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு, நிலுவையில் இருப்பதால், பிரச்சாரத்தின் போது, கோடநாடு பற்றி பேச ஸ்டாலினுக்கு தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
மக்களவைத் தேர்ந்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அதனை தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் விளம்பரம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களின் மீதுள்ள வழக்குகளை, அவர்களது வலைதளங்களில் வெளியிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தரை, ஆதரித்து வி.சி.க தலைவரும் மதச்சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றிருப்பவருமான திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மத்தியில் நடப்பது சர்வாதிகார ஆட்சி, மாநிலத்தில் நடப்பதோ உதவாகரை ஆட்சி - ஸ்டாலின்
காங்கிரஸ் ஆட்சியமைதால் முதல் வேலையாக மகளிர் இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் அமல் படுத்துவோம் என்ற வாக்குறுதியை ராகுல் காந்தி கொடுத்திருக்கிறார். மு.க.ஸ்டாலின்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட, 5 வருடம் தேவைப்பட்டதா? - ஸ்டாலின்
15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுவேன் என்ற மோடி 15 ரூபாயையாவது போட்டிருக்கிறாரா? வாக்குறுதிகளை மட்டும் வாரி வாரி வழங்கும் மோடியால் எதையும் செயல்படுத்த முடியாது. மதசார்பற்ற இந்தியாவை உருவாக்குவேன் என்றீர்களே, செய்தீர்களா? நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவுக்கு நீதி கிடைத்ததா? மகளிர் இட ஒதுக்கீடு என்னாச்சு? - ஸ்டாலின்
பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் இழிவாகப் பேசும், ஹெச்.ராஜாவுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். - சிவகங்கையில் ஸ்டாலின் பிரச்சாரம்.
கார்ப்பரேட்டுகளுக்காக மட்டும் பாடுபடும் அது பி.ஜே.பி அல்ல சி.ஜே.பி அதாவது கார்ப்பரேட் ஜனதா கட்சி - மு.க.ஸ்டாலின்
”ஏற்கனவே இந்த ஆட்சி மிகவும் கொடுமையாக உள்ளது. இந்நிலையில் நான் உங்களை வெயிலில் ரொம்ப நேரம் உட்கார வைத்து கொடுமைப் படுத்த விரும்பவில்லை” என்றார் ஸ்டாலின்
தமிழ் சமூகத்தின் நிம்மதியைக் கெடுப்பது, பொய்களை மட்டுமே பேசுவது, கலவரத்தைத் தூண்டுவது இது மட்டும் தான் ஹெச்.ராஜாவின் வேலை. இப்படியானவர் நாடாளுமன்றத்துக்கு சென்றால், அது நாடாளுமன்றத்துக்கும் சிவகங்கை மக்களுக்களாகிய உங்களுக்கும் தான் அவமானம் - மு.க.ஸ்டாலின்