Advertisment

பாட்னாவில் போக்குவரத்து விதியை மீறினாரா ஸ்டாலின்? பா.ஜ.க வீடியோ புகார்; லாலு கட்சி பதிலடி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுடன் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கும் இடத்துக்கு காரில் சென்றபோது சீட் பெல்ட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறியதாக பா.ஜ.கவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
CM MK Stalin and Tejashwi Yadav violated traffic rules PATNA BJP alleged Tamil News

பாட்னாவில் காரில் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் சீட் பெல்ட் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.கவினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tamil Nadu chief minister M K Stalin - deputy CM Tejashwi Yadav  Tamil News: பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-விற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து ஒன்றிணைந்து பேசியுள்ளனர். இக்கூட்டத்தில் 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 6 மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டம் குறித்து ஆளும் பா.ஜ.க தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisment

இதற்கிடையில், நேற்று வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுடன் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கும் இடத்துக்கு காரில் சென்றபோது சீட் பெல்ட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஸ்டாலினின் வீடியோவைப் பகிர்ந்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,"பாருங்கள், மீண்டும் மீண்டும், ஆயிரம் முறை பாருங்கள். மன்னனின் மகன் ஆட்சி செய்வார், ஜனநாயகத்தை அவமதிப்பார். நிதிஷ் அரசில், போக்குவரத்து விதிகளை மீற, மன்னனின் மகனுக்கு சுதந்திரம் உள்ளதா? பாபா பாகேஷ்வர். சீட் பெல்ட் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது, ​​உங்கள் கொள்கை மற்றும் நெறிமுறைகள் எங்கே போனது?" என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

பாஜக-வின் இந்த குற்றச்சாட்டை மறுத்த ஆர்ஜேடி எம்எல்ஏ சக்தி சிங் யாதவ், "ஸ்டாலின் புல்லட் ப்ரூப் காரில் பயணம் செய்தார். அதில் உள்ள சீட் பெல்ட் சாதாரண கார்களை விட வித்தியாசமான இடத்தில் உள்ளது. பாஜக தலைவருக்கு அதன் இடம் குறித்த அறிவு இல்லை. தமிழக முதல்வர் கண்ணியமானவர், அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறார்.

இருப்பினும், அந்த வீடியோவை தான் பார்க்கவில்லை என்றும், இந்த விஷயம் தனது கவனத்திற்கு வரவில்லை என்றும் போக்குவரத்து எஸ்பி பூரன் குமார் ஜா கூறியுள்ளார்.

கடந்த மாதம் பாபா பாகேஷ்வர் தாம் சாமியார் நான்கு நாள் மத நிகழ்ச்சிக்காக நௌபத்பூருக்கு வந்திருந்தார். அவர் பாட்னா விமான நிலையத்திலிருந்து புறப்படும் போது காரில் சீட் பெல்ட் அணியவில்லை. அவரது வீடியோ வைரலானதை அடுத்து, பாட்னா போக்குவரத்து போலீசார் அவருக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர். அப்போது, ​​ஜே.டி.யு மற்றும் ஆர்.ஜே.டி.,யின் செயலை நியாயப்படுத்தி, அவர் யாராக இருந்தாலும், சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான் என்று கூறியிருந்தனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Mk Stalin Cm Mk Stalin Tejashwi Yadav Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment