scorecardresearch

கருணாநிதி நினைவிடத்தில் ரூ. 80 லட்சத்தில் அருங்காட்சியகம்.. கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட வளாகத்தில் ரூ. 80 லட்சம் மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்க மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதியளித்துள்ளது.

கருணாநிதி நினைவிடத்தில் ரூ. 80 லட்சத்தில் அருங்காட்சியகம்.. கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி

தி.மு.க முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மெரினாவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தார். அதன்படி 2.21 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், நினைவிடம் கட்டப்படுகிறது.

இதில் கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரைப் பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக, கருணாநிதி நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.

இந்த அருங்காட்சியகம் ரூ.80 லட்சத்தில் அமைக்கப்படவுள்ளது. கருணாநிதி நினைவிட வளாகத்தில் 40 சென்ட் நிலத்தில் 1978 ச.மீ பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. இந்நிலையில், அருங்காட்சியகம் அமைப்பதற்கான திட்டம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், கருணாநிதிக்கு மெரினா கடலில் பேனா நினைவு சி்ன்னம் அமைப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு அ.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், சில சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடலில் நினைவு சி்ன்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து நினைவு சி்ன்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coastal zone management authority grants permission to museum at karunanidhi memorial