அ.தி.மு.க ஒன்றிணைப்பு; 10 நாள் கெடு விதிக்கவில்லை: பின்வாங்கிய செங்கோட்டையன்

தான் கட்சி தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதிக்கவில்லை என்றும், மாறாக பத்து நாட்களுக்குள் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் கூறியதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

தான் கட்சி தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதிக்கவில்லை என்றும், மாறாக பத்து நாட்களுக்குள் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் கூறியதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
sengottaiyan

அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதிக்கவில்லை எனவும் ஊடகங்கள் தான் அதனை தவறாக போட்டுவிட்டனர் எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையிலிருந்து  விமானம் மூலம் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் அதிமுக ஒன்றிணைப்பு குறித்து கேள்வி எழுப்பவே விரைவில் நல்லது நடக்கும் என்றார்.

Advertisment

மேலும் இன்று நீங்கள் பங்கேற்க இருக்கும் திருமண நிகழ்ச்சியில் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இதுவரை ஏதும் இல்லை நல்லதே நடக்கும் என பதிலளித்த அவரிடம் அதிமுக ஒன்றிணைய பத்து நாள் கெடு விதித்தீர்கள் என கேள்வி எழுப்பவே நான் பத்து நாள் கெடு விதிக்கவில்லை பத்து நாட்களில் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும், ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தேன். ஆனால் ஊடகத்தில் தான் தவறாக போட்டுவிட்டனர் என பதிலளித்தார். தொடர்ந்தது ராணுவ கட்டுப்பாடுடன் இருந்த கட்சி இப்போது இப்படி ஆகிவிட்டதே என்ற கேள்விக்கு அது உங்கள் கருத்து எனவும் பதிலளித்து புறப்பட்டார்.

செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது செங்கோட்டையன் பேசுகையில், "அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும்." என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். மேலும், பிரிந்து சென்றவர்களை இணைக்கவிட்டால் ஒருங்கிணைப்பு பணிகளை தாங்களே மேற்கொள்போவதாகவும், பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அ.தி.மு.க வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements
Admk Sengottaiyan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: