Advertisment

பழைய வாகன உதிரிபாகங்கள் கண்காட்சி: கோவையில் நாளை தொடக்கம்

பழைய வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விழிப்புணர்வு கண்காட்சியானது கோவை கொடிசியா வளாகத்தில் நாளை முதல் நடக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore: Automotive aftermarket expo 2 begins sep.2

வாகன விற்பனைக்கு பின்னர் அதன் உதிரிபாகங்கள் கிடைக்காத பொருட்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடக்கிறது.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

ஆட்டோமோட்டிவ் ஆப்டர் மார்க்கேட் கண்காட்சியின், 2ம் பதிப்பு கோவையில் நடக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அக்மா அமைப்பின், தென்னிந்திய செயளாளர் சரவணன் மற்றும் அகில இந்திய தலைவர் வீன்னி மேத்தா - தலைவர் ரமாசங்கர் பாண்டே கூறியது பின்வருமாறு:-

வாகன விற்பனைக்கு பின்னர் அதன் உதிரிபாகங்கள் கிடைக்காத பொருட்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப்.2, 3 ம்தேதி) ஆட்டோமோட்டிவ் ஆப்டர்மார்க்கேட்டிவ் எக்ஸ்போ 2ம் பதிப்பாக நடைபெற உள்ளது.

publive-image

இந்த கண்காட்சியில், இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருத்தும், ஆப்டர் மார்க்கேட் தொழில் பிரிவை சேர்ந்த பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இதன் முதல் பதிப்பு கடந்த 2022 ஜூன் மாதம், நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் பல்வேறு சிறு மற்றும் குறு வாகன பழுது பார்ப்பவர்கள் கலந்து கொண்டு பயணடைந்தனர்.

அதே போன்று இரண்டாம் பதிப்பாக இங்கு நடைபெற உள்ளது இதிலும் கோவையை சார்ந்த வாகன உரிமையாளர்கள் பழுது நீக்குபவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இந்த கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்பெற https://t.me/ietamil

Tamilnadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment