Advertisment

கோவை பா.ஜ.க., பந்த் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. இஸ்லாமிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு

கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பாஜக சார்பில் வரும் 31 ஆம் தேதி கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Coimbatore blast Muslim leaders hold meeting in police officials

கோவையில் இஸ்லாமிய இயக்கங்கள் கமிஷனர் பாலகிருஷ்ணனுடன் சந்திப்பு

பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ள பந்த் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், தேவையின்றி கோவையில் மத பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதே தங்களது கோரிக்கையாக உள்ளது எனவும் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பாஜக சார்பில் வரும் 31 ஆம் தேதி கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடையடைப்பு அன்று அனைத்து வணிகர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் , கடைகளை அடைக்கக் கோரி வற்புறுத்தப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அன்றைய தினம் அனைத்து பொருட்களும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் மாநகர காவல் துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அனைத்து ஜமாத், அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பினர் கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் உடன் பேச்சு நடத்தினர்.

இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர் செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:-

பாஜக அறிவித்த பந்த் என்பது கோவை மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்திருகிறது. பந்த் சமயத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என காவல்துறையிடம் கேட்டுள்ளோம்.

வருங்காலத்தில் காவல்துறைக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் மதக் கண்ணோட்டத்தில் இந்த சம்பவத்தை பார்க்க வேண்டாம்.

எல்லாம் மதத்திலும் ,மதத்தை நம்பாதவர்களும் தவறு செய்கிறார்கள்.ஆனால் இஸ்லாமியர்கள் தவறு செய்யும் போது அதை பல கோணத்தில் தொடர்பு படுத்தி பேசுகிறார்கள்.

இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நாங்கள் உண்மை கண்டறியும் சோதனை குழு ஒன்றை அமைத்தோம். அந்தக் குழு விசாரித்ததில் கைது செய்யப்பட்ட குற்றவாளியில் ஒருவர் கார் வியாபரம் செய்பவர்,

அவர் வெறும் கார் வியாபரம் செய்பவர் மட்டுமே, அவர் குடும்பம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிற சூழலில் உள்ளது. இப்படி இருக்க அவர் மீது எந்த தவறுமில்லை என மாநகர காவல் ஆணையரிடம் தெரிவித்துள்ளோம்.

தேவையில்லாமல் கோவையில் மதப் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதே எங்கள் விருப்பம்.

இவ்வாறு, அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர் கூறினார்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment