Advertisment

இது என்னோட மண்; ஒரு பிடி கூட எடுக்க முடியாது- காலா பட பாணியில் போஸ்டர் ஒட்டிய தி.மு.க. வினர்

இந்த போஸ்டர்கள் கோவை கோட்டைமேடு உக்கடம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore DMK youth wing poster

கோவையில் காலா பட பாணியில் திமுக மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Advertisment

அந்த போஸ்டரில் காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த், வில்லனை பார்த்து பேசும், "இது என்னோட மண், ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது" என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

காலா படத்தில் ரஜினிகாந்த் நாற்காலியில் கருப்பு உடை அணிந்து கால் மீது கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்திருப்பதைப் போல, இந்த போஸ்டரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

Coimbatore DMK youth wing poster

மேலும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.

இந்த போஸ்டர்கள் கோவை கோட்டைமேடு உக்கடம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "என் மண், என் மக்கள்" என்ற பயணத்தை இன்று தொடங்க உள்ள நிலையில், கோவையில் இப்படி போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment