மாணவர்களுக்கு கல்வி உதவி திட்டம் துவக்கவிழா ஏப்ரல் 1ம் தேதி வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்கள் மற்றும் சி.ஆர்.எஸ் நினைவு அறக்கட்டளை சார்பாக கோவையில் நடைபெற உள்ளது.
கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள கொடிசியா அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராக் அமைப்பின் தலைவர் சௌந்தரராஜன் கூறியதாவது; கோவை வர்த்தக மற்றும் தொழிற்துறை சங்கங்கள், சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை – ராக் அமைப்பு இணைந்து மாணவர்களுக்கு கல்வி உதவி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மணி உயர்நிலைப் பள்ளியின் அரங்கில் நடைபெற உள்ள இந்த திட்டத்தில் ஐந்து மாணவர்கள் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல், முதுநிலை படிப்பு வரை கல்வி உதவித்தொகை அளிக்கப்படும். அதுமட்டுமின்றி அவர்கள் தொடர்ந்து சிறப்பாக படித்திட உதவியாகவும் ஊக்கமளிக்கும் வகையிலும் ஒவ்வொரு மாணவருக்கும் பள்ளி முதல் கல்லூரி வரை உடனிருந்து இந்த அமைப்பு வழிநடத்தும் என இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“