Advertisment

டூவீலரில் பின்னால் உட்கார்ந்து சென்றாலும் ஹெல்மெட் கட்டாயம்: கோவை போலீஸ் உறுதி

சாலை விபத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளை கட்டுப்படுத்த கோவை மாநகர காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

வரும் 26 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தை ஒட்டி செல்பவர்கள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என கோவை மாநகர காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

கோவையில் சாலை விபத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளை கட்டுப்படுத்த கோவை மாநகர காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் விபத்துகளில் சிக்கி பலியாகும் சூழல்கள் உள்ளன.

இந்த நிலையில் கோவை மாநகர காவல் துறை 100 சதவீத சாலை பாதுகாப்பை உறுதி செய்ய இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் நபர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்தி உள்ளது.

வரும் 26 ஆம் தேதி முதல் இந்த விதி நடைமுறைக்கு வருகிறது.

publive-image

மேலும் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தின் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் மீது மோட்டார் வாகன விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை மேறகொண்டு அவர்களுக்கு ஒருவார காலத்திற்கு போக்குவரத்து பூங்காவில (Traffic Park) தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்க கோவை மாநகர காவல்துறை முடிவு எடுத்துள்ளது.

எனவே, வாகன ஓட்டிகள் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின் படி வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்கள் தலைக்கவசம் அணிந்து தங்களது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டுமென மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment