Advertisment

கொற்றக்கொடையா? கொள்கையா?: கோவையில் கருணாநிதியின் 100வது பிறந்த நாள் போஸ்டர்

தமிழ்கத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் "பராசக்தி ஹீரோடா" என்ற போஸ்டர் தி.மு.வி-னர் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore: Karunanidhi 100th birth anniversary poster Tamil News

TN Chief Minister Kalaignar Karunanidhi 100th birth anniversary celebration poster Coimbatore Tamil News

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

தி.மு.க முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர், சினிமாத் துறையினர், பொதுமக்கள் என பலரும் கருணாநிதி யின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை சினிமா வாழ்க்கை என பல்வேறு விஷயங்களை நினைவு கூறி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாநகர திமுக இளைஞரணி சார்பில் உக்கடம், கோட்டைமேடு, ஆகிய பகுதிகளில் கலைஞரின் 100-வது நாள் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் "கொற்றக்கொடையா? கொள்கையா? எது வேண்டும் எனில் கொள்கையை விற்று பிழைக்க வேறு நபர் பார் என்போம்!". என்ற வசனமும் "பராசக்தி ஹீரோடா!" என்ற வாசகமும், "எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம் இதுதான்" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

publive-image

இந்த போஸ்டர்கள் இளைஞரணி துணை அமைப்பாளர் C.M.S.மசூது தலைமையில் ஒட்டப்பட்டுள்ளன. அதே சமயம் ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக திமுக சார்பில் கலைஞரின் 100வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Dmk Coimbatore Karunanithi Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment