Coimbatore man teaches farming to his two daughters amid covid19 lockdown : கொரோனா ஊரடங்கால் மக்கள் பலரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். குழந்தைகளும் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக வீடுகளில் இருந்து என்ன செய்வது என்று அறியாமல் முழித்து வருகின்றனர். ஒரு சில பள்ளிகளில் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவை பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் தன்னுடைய இரண்டு மகள்களுடன் சேர்ந்து விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். ஆடிப்பட்டம் விதைப்பதற்காக பொள்ளாச்சியில் இருந்து தாத்தூர் செல்லும் வழியில் அமைந்திருக்கும் தன்னுடைய வயலில் இரண்டு பெண் குழந்தைகள் கையிலும் நாற்றுகளை கொடுத்து நடவு செய்ய கற்றுக் கொடுத்தார்.
தந்தையை பின்பற்றி விவசாயத்தில் ஈடுபடும் மகள்
மேலும் படிக்க : பழங்குடி மாணவர்களின் கல்வி என்னாகும்? ஐஇ தமிழ் நேரடி ரிப்போர்ட்
ஆனைமலையில் நகைகக்டை வைத்திருக்கும் அவர் மகள் மகாவர்ஷினி துப்பாக்கிச்சுடும் போட்டியில் மாவட்ட அளவில் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார். அவருடைய இளைய மகள் காவ்யாவிற்கு, அவர் அப்பா விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் அதனை கூற முத்துக்குமரன் முதலில் இயற்கை விவசாயம் செய்து வந்துள்ளார்.
விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் முத்துக்குமரன்
ஆனால் இயற்கை விவசாயத்திற்கும், கைக்குத்தல் அரிசிக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பில்லை என்பதை உணர்ந்த அவர் தற்போது சாப்பாட்டு அரிசிக்கு பதிலாக இட்லி அரிசி நெல் ரகங்களை விவசாயம் செய்து வருகிறார். தென்மேற்கு பருவமழை காரணமாக எங்கும் பசேல் என்றும், ஈரத்துடனும் இருக்கும் பொள்ளாச்சியில், அதிகாலையில் வேலையாட்களுடன் நாத்து நடவு செய்ய துவங்கிய போதிலும், தன் வருங்கால சந்ததியினருக்கும் விவசாயம் குறித்த புரிதல் இருக்க வேண்டும் என தினமும் அவர்களை தன்னுடைய நிலத்திற்கு அழைத்து வருகிறார் முத்துக்குமரன்.
மேலும் படிக்க : பொள்ளாச்சியை மணக்க வைக்கும் கொக்கோ விவசாயம்… சாக்லேட்டின் ரகசியம் இங்கே!
தன்னுடைய நிலத்தின் ஒரு பக்கத்தில் இட்லி குண்டு அரிசியும், மற்றொரு பக்கத்தில் சாப்பாட்டு அரிசியும் விளைவிக்க இருப்பதாக கூறினார். நமக்கு அடுத்து வரும் நம்முடை வம்சத்தினரும் விவசாயத்தை கற்றுக் கொள்ள வேண்டும். இது தான் நம் பாரம்பரியம் என்று கூறுகிறார் அவர். நாற்று நடவுக்காக மட்டும் தன் மகள்களை வயலுக்கு அழைத்து வராமல், நிலத்தை பண்படுத்தும் நாளில் இருந்தே அவர்களை அழைத்து வந்து விவசாய பாடம் நடத்தியுள்ளார் இந்த தந்தை.