Advertisment

5 நாட்களாக பணிக்கு வராத தூய்மை பணியாளர்கள்… வீடு வீடாக சென்று குப்பை வாங்கிய கவுன்சிலர் - வீடியோ!

கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சியில் 5 நாட்களாக குப்பை அள்ளாத நிலையில், அதனால் மனமுடைந்த தி.மு.க கவுன்சிலர் மகன்களுடன் சேர்ந்து வீடு வீடாக சென்று குப்பை வாங்கினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore: mettupalayam DMK councillor JAMRUTH BEGUM Collects garbage Tamil News

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 5 நாட்களாக குப்பைகளை எடுக்க தூய்மை பணியாளர்கள் பணிக்கு வராத நிலையில், தி.மு.க நகர செயலாளரின் மனைவியும், நகராட்சி உறுப்பினருமான ஜம்ரூத்பேகம் தனது மகன்களுடன் சேர்ந்து குப்பை அள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதற்கு தலைவராக மெஹரீபாபர்வீன், துணைத் தலைவராக அருள் வடிவு ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டில் தி.மு.க நகர செயலாளர் முகமதுயூனஸ் மனைவி ஜம்ரூத் பேகம் வார்டு உறுப்பினராக உள்ளார்.

Advertisment

இவரது வார்டில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல், குடியிருப்புகளில் குப்பைகளை சேகரித்தல், குடிநீர் விநியோகம் முறையாக வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து தரக் கோரி நகராட்சி நிர்வாகத்திடம் வார்டு உறுப்பினர் ஜம்ரூத்பேகம் பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் நகராட்சி தலைவர் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே இவரது வார்டில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, வார்டு பகுதியில் உள்ள மக்கள் இவரது வீட்டிற்கு சென்று இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜம்ரூத் பேகம் மற்றும் இவரது மகன்கள் ஆகியோர் சேர்ந்து வார்டு பகுதியில் தேங்கியிருந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே ஒரு வார்டு உறுப்பினர் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை எடுக்காததால் தனது மகன்களுடன் சேர்ந்து குப்பைகளை எடுத்ததை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment