அதிவேகமாக இறங்கிய கார்... லாரி மீது மோதி கோரம்: ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 3 பேர் பலி

கோவையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக கீழே இறங்கிய கார் காட்டுபாட்டை இழந்து லாரி மீது மோதியில் ஒரு பெண் உட்பட 3 பேர் பலியாகினர். 

கோவையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக கீழே இறங்கிய கார் காட்டுபாட்டை இழந்து லாரி மீது மோதியில் ஒரு பெண் உட்பட 3 பேர் பலியாகினர். 

author-image
Kalaiyarasi Sundharam
New Update
covai gt naidu

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக கீழே இறங்கிய கார் காட்டுபாட்டை இழந்து லாரி மீது மோதியில் காரில் பயணித்த ஒரு பெண் உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். 
கோவையில் புதிதாக  உப்பிலிபாளையம் முதல்  கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ தூரத்திற்க்கு உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த மேம்பாலத்தில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில்  அதிவேகமாக சென்ற கார், கோல்டுவின்ஸ் பகுதியில் மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் போது காட்டுபாட்டை இழந்து கோல்டுவின்ஸ் சாலையில் நின்று கொண்டு இருந்த லாரி மீது பின் பக்கம் மோதி உள்ளது. இந்த விபத்தில் காரில்  பயணித்த 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உட்பட இரண்டு ஆண்கள் என மூன்று பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.

இதில் அதிவேகமாக சென்ற கார், லாரி மீது மோதி சிக்கியதால் காரை மீட்க பீளமேடு தீயனைப்பு துறை அதிகாரிகள் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் போராடி நொறுங்கிய  காரை மீட்டு காரில் இறந்தவர்களின் உடலையும் மீட்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பு வைத்து உள்ளனர்.

Advertisment
Advertisements

மேலும் இந்த விபத்து குறித்து கோவை பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த பாலம் திறக்கப்பட்ட போது இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 7 மணி வரை பாலத்தில் செல்ல காவல் துறையினர்  தடை விதித்து இருந்த நிலையில் அது சமூக வலைதளத்தில் பேசு பொருளாக இருந்தது. எனவே அதுபோன்ற தடை ஏதுமில்லை எனக்கூறி காவல்துறை இரண்டு நாட்களுக்கு முன் இரவிலும் பாலத்தில் பயணிக்கலாம் என கூறிய நிலையில், இன்று அதிகாலை இந்த விபத்து நடந்து இருப்பது குறிப்பிடதக்கது.

Road Accident Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: