Coimbatore one rupee idli paatti Kamalathaal follows ethic in fixing the price of food : சிறுவாணி மலைச்சாரலில் ஆள் ஆரவாரமற்ற சாலை ஒன்றின் மேல் அமைந்திருக்கிறது கமலாத்தாள் பாட்டியின் இட்லி கடை. வீட்டோடு ஒட்டிய சமையலறையில் தினமும் தன்னை தேடி வரும் மக்களுக்கு வயிறார உணவு அளித்து வருகிறார் கமலாத்தாள் பாட்டி.
85 வயதிலும் காலை 5 மணிக்கு எழுந்து, சட்னி அரைத்து, இரண்டு வித தொடுகையுடன் இட்லியை பரிமாறுகிறார் கமலாத்தாள் பாட்டி. விலை என்ன என்று கேட்டால் நீங்கள் அசந்து போக மாட்டீர்கள் தான். ஏன் என்றால் தேசிய ஊடகங்களிலும் அடிக்கடி கமலாத்தாள் பாட்டி வந்து செல்கிறார்.
K Kamalathal ji, an 85-year-old woman, from Tamil Nadu who is selling idlis for just ₹1 for the last 30 years. Even in the lockdown, despite the losses, she says, “Many migrant labourers are stuck here.”
Her selfless service is an inspiration !???????? pic.twitter.com/jtH1TQRiU0— Mohammad Kaif (@MohammadKaif) May 11, 2020
கோவை மாவட்டம், சிறுவாணி அருகே அமைந்திருக்கும் வடிவேலாம்பாளையம் என்ற பகுதியில் உள்ளது ஒரு ரூபாய் இட்லி கடை. இதனை 50 வருடங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறார் கமலாத்தாள் பாட்டி. 15 வருடங்களுக்கு முன்பு வரை இங்கு இட்லியின் விலை வெறும் 50 பைசா தான். தற்போது விலைவாசி உயர்வின் காரணமாக மேலும் 50 பைசாவை அதிகரித்துள்ளார்.
இந்த விலை கட்டுமா பாட்டி என்று கேட்டால், நான் காசு பணம் சேமித்து வைத்து என்ன காணப் போகின்றேன் என்கிறார். பாட்டியின் கணவர் பெயர் குப்புசாமி கவுண்டர். இந்த இணைக்கு நான்கு குழந்தைகள். இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உயிரிழந்த பிறகு புருஷோத்தமன் என்ற மகன் மட்டும் கமலாத்தாளுக்கு இருக்கிறார். அவரும் தாயாருடன் இல்லை. தனியாகவே வாழ்ந்து வருகிறார் கமலாத்தாள் பாட்டி. காலை எழுந்து மதியம் 12 மணி வரை இட்லி வியாபாரம் களை கட்டுகிறது. ஊரில் இருக்கும் பெரும்பான்மை நபர்களின் காலை உணவு இங்கு தான் என்று நினைக்கின்றேன். அத்தனை கூட்டம்.
ஊரில் அனைத்து பகுதிகளிலும் ஒரு இட்லியின் விலை ரூ. 5-ஐ தாண்டிவிட்டது. ஆனாலும் இங்கு மட்டும் ஏன் இட்லிக்கு விலை ரூ. 1 என்று கேள்வி கேட்ட போது அவர் கூறுகிறார் “இங்கு வாழும் பெரும்பான்மை மக்கள் கூலி வேலைக்கு சென்று வருகிறார்கள். கல்லுடைக்க, செங்கற்சூளையில் வேலை செய்ய என்று மிகவும் கடினமான வேலை செய்கிறார்கள். காலை நேர உணவாக குறைந்ததது 7 இட்லி ஆவது உண்பார்கள். ஒரு இட்லியின் விலை ரூ. 5-க்கு வைத்து விற்றால், கூலி வேலை செய்யும் சாமானியனுக்கு அந்த விலை கட்டுப்படியாகுமா? என்று கேள்வி எழுப்புகிறார் கமலாத்தாள் பாட்டி.
அக்கம் பக்கம் ஊர்களில் இருந்தும் இங்கு வந்து பலரும் சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் பணம் தராமல் கூட அப்படியே சென்றுவிடுவார்கள். சிலரோ வீட்டுக்கு சென்று பணம் எடுத்து வந்து தருகிறேன் என்று கூறுவதும் உண்டு. என்னை அறிந்து கொண்டு, என்னை பார்க்க வரும் பலரும் என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, வீட்டுக்கு சென்றதும் பணத்தினை வங்கியில் போட்டுவிடுகிறேன் என்று சொல்வதும் உண்டு. ஆனால் அவர்கள் அப்படி ஒரு போதும் செய்வதில்லை. என்னை வைத்து விளம்பரம் தேடிக் கொண்டவர்கள் அதிகம் என்றும் அவர் கூறுகிறார். பசிக்கு வந்து உணவு சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் போகும் நபர்களிடம் பணம் கொடுங்கள் என்று நான் ஒரு போதும் கேட்டதே இல்லை என்கிறார் கமலாத்தாள் பாட்டி.
10 வருடங்களுக்கு முன்பு வரை நான் ஆட்டங்கல்லில் தான் மாவு ஆட்டி இட்லி சுட்டேன். அப்போது போண்டா வியாபாரமும் சேர்த்தே செய்தேன். இப்போது தான் முடிவதில்லை. ஆனால் இந்த வீடு என்னுடையது. அதனால் எனக்கு வாடகை பிரச்சனை இல்லை. இந்த தைய இலைகளும், வாலை இலைகளும் எங்களின் தோட்டத்தில் விளைகிறது. அதனால் அதனை நான் பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயத்தில் இவ்வூர் மக்கள் தங்களின் தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும் தக்காளிகளையும் என்னிடம் இலவசமாக விற்று செல்கிறார்கள். அதனால் நான் விற்கும் இட்லிக்கு அதிக விலை கேட்க மனம் வரவில்லை. ஆனால் வாடகை வீட்டில் அல்லது கடையில் இட்லி விற்கும் நபர்கள் நிச்சயம் அதிக விலைக்கு தான் இட்லி விற்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு அது கட்டுப்படியாகாது என்றும் கூறுகிறார் இட்லி பாட்டி.
முக ஸ்டாலின் முதல், முகமது கைஃப் வரை இன்று அனைவரும் கமலாத்தாள் பாட்டியை கொண்டாட காரணம் இருக்கிறது என்றால் அது அவரின் மனித நேயம் மிக்க செயல் தான். கொரோனா ஊரடங்கு காலத்தில் விலை வாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனாலும் கூட விலையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் அதே ரூ. 1-க்கு தான் இட்லி விற்று வருகிறார். இன்று மட்டுமல்ல வாழும் காலம் வரை இந்த விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் தொடர்ந்து விற்பேன் என்று அவர் கூறினார்.
மரணத்தின் விளிம்பில் வயது நிற்கிறது. நான் சொத்து சேர்த்து எதையும் என்னோடு எடுத்து செல்லப் போவதில்லை. என்னால் இயன்ற வரையில் நான் ஒரு ரூபாய்க்கு தான் இட்லி விற்பேன் என்று வெற்றிலைக்கறை பற்கள் தெரிய மகிழ்ச்சியுடன் சிரிக்கிறார் இட்லி பாட்டி. அவர் மாவு ஆட்டுவதற்கு தனியாக மிஷினை தானமாக கொடுத்து உதவியுள்ளனர் உள்ளூர் தலைவர்கள். இதுவரை மண் அடுப்பில் இட்லிகளை தயாரித்த பாட்டி தற்போது தான் எல்.பி.ஜி. கியாஸ் சிலிண்டருக்கு மாறியுள்ளார். தொண்டு நிறுவனங்கள் பலவும், பாட்டியின் சேவையில் தொய்வு ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தங்களால் இயன்ற அளவு அரிசி மற்றும் இதர பொருட்களை கொடுத்து உதவியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Coimbatore one rupee idly paatti kamalathaal follows ethic in fixing the price of food
திமுக அணி விறுவிறு கூட்டணி ஒப்பந்தம்: அதிமுக அணியில் நீடிக்கும் இழுபறி
தமிழகத்தில் மதுவிலக்கு இனி கனவுதானா? வாக்குறுதி தரக்கூட முன்வராத கட்சிகள்
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?