Advertisment

கோவை: ஈஷா- காருண்யா கட்டிடங்களை இடிக்கக் கோரி அனைத்துக் கட்சி போராட்டம் அறிவிப்பு

ஈஷா, காருண்யா நிறுவனங்களின் கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சிகளின் சார்பில் வருகிற 16 ஆம் தேதி ஆலாந்துறையில் ஆர்ப்பாட்டம்.

author-image
WebDesk
New Update
Coimbatore: protest demanding demolition of Isha-Karunya buildings all-party tamil news

Coimbatore: Announcement of all-party protest demanding demolition of Isha-Karunya buildings Tamil News

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

Advertisment

Coimbatore - Isha-Karunya buildings  Tamil News: கோவை மலையடி வாரத்தில் சுற்று சூழல் அனுமதி இன்றி லட்சகணக்கான சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஈஷா, காருண்யா நிறுவனங்களின் கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சிகளின் சார்பில் வரும் 16 ம்தேதி ஆலாந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக சி.பி.எம் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் சி.பி.எம் அலுவலகத்தில் சி.பி.எம். காங்கிரஸ், சி.பி.ஐ, மதிமுக, விசிக, தபெதிக மற்றும் அம்பேத்காரிய, பெரியாரிய அமைப்புகளின் மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் சி.பி.எம் கட்சியின் மாவட்ட செயலாளர் பத்மநாபன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், நாளை சமூக நல்லிணக்கண மனித சங்கிலி போராட்டம் கோவையில் நடைபெறுகின்றது.

இதில் 5000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். மேலும் கோவை மக்களிடையே மதநல்லிணகத்தை ஏற்படுத்தும் விதமான இந்த மனித சங்கிலி நடத்தப்படுகிறது. குறிப்பாக கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் மற்றும் காருண்யா கல்வி நிறுவனங்கள் அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டி இருப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கபட வேண்டும் எனவும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16"ம்"தேதி அனைத்து கட்சி சார்பில் ஆலந்துறை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

publive-image

கோவை மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் 500 சதுர அடியில் அனுமதி இன்றி கட்டிடம் கட்டி இருந்தால் கூட கடும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த நிறுவனங்கள் 10 லட்சம் சதுர அடிக்கும் மேலான இடங்களில் எந்த அனுமதியும் இன்றி கட்டிடங்கள் கட்டியுள்ளனர். மலையடிவாரத்தில் உயிர் சூழலை பாதிக்கும் வகையில் அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் 20 கி.மீ சுற்றளவில் யானைகள் வழிதடம் பாதிக்கப்பட்டு அவை தடம் மாறுகின்றன.

இந்த ஈஷா,காருண்யா நிறுவனங்களுக்கு சுற்று சுழல் அனுமதி அளிக்க கூடாது , அனுமதி இன்றி கட்டப்பட்ட ஈஷா, காருண்யா நிறுவனங்களின் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு சுற்று சுழல் அனுமதி தேவையில்லை என்பது மோசமான நடைமுறை. நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அனுமதியற்ற கட்டிடங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Tamilnadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment