ரஜினியின் முத்திரையால் குழப்பம்: மும்பை நிறுவனம்

ரஜினிகாந்தின் பாபா முத்திரை தங்கள் நிறுவனத்தின் வணிக முத்திரையைப் போலவே இருப்பதாக மும்பையைச் சேர்ந்த தொழில்முனைவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது

By: January 8, 2018, 9:43:20 AM

ரஜினிகாந்தின் பாபா முத்திரை தங்கள் நிறுவனத்தின் வணிக முத்திரையைப் போலவே இருப்பதாக மும்பையைச் சேர்ந்த தொழில்முனைவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த சமூக இணைப்பு செயலி நிறுவனம் வாக்ஸ்வெப் (Voxweb). கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்ட அந்நிறுவனத்தின் வணிக முத்திரையில் சுட்டு விரல், சுண்டு விரல் இடையே இரண்டு விரல்கள் மடக்கப்பட்டு, கட்டை விரல் மேல்நோக்கி உள்ளது.

ரஜினி மக்கள் மன்றத்தின் முத்திரையில் கட்டைவிரல் உள்நோக்கி மடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வாக்ஸ்வெப் நிறுவனர் யாஷ் மிஸ்ரா கூறுகையில், “வேறொரு நிறுவனத்தின் முத்திரை எங்களுடையது போல இருந்தால் பெரிய விஷயமல்ல என்றும், சமூக ஊடகம் மற்றும் அரசியல் கட்சி போன்ற அதிகம்பேர் பின்தொடரும் அமைப்பில் முத்திரை ஒத்துப் போனால், குழப்பமே ஏற்படும்” என்று  தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Confusion on rajinikanths mudra with mumbai company

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X