இணையும் காங்கிரஸ் – அதிமுக

காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், அதிமுக முன்னாள் அமைச்சர் இருவர் குடும்பமும் திருமண பந்தத்தில் இணைவது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By: June 28, 2017, 6:53:22 AM

தமிழக அரசியலில் எதிர் எதிர் அணியில் இருக்கும் அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் திருமணம் மூலம் இணைய உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். இவரது மகளுக்கும், முன்னாள் அமைச்சரும் அதிமுகவைச் சேர்ந்தவருமான இசக்கி சுப்பையாவின் மகன் இசக்கி துரைக்கும் இன்று மாலை திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. சென்னை ஹில்டன் ஒட்டலில் நடைபெறும் இந்த விழாவில் இரண்டு கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

தமிழகத்தில் அதிமுக மூன்று அணிகளாக இருக்கின்றன. அந்த மூன்று அணிகளும் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிக்கின்றன. காங்கிரஸ் கட்சியோ திமுக கூட்டணியில் இருக்கிறது. இந்நிலையில் இந்த காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், அதிமுக முன்னாள் அமைச்சர் இருவர் குடும்பமும் திருமண பந்தத்தில் இணைவது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Congress and admk join today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X