Tamil Nadu Congress | Madras High Court | தேர்தல் பரப்புரையில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கம் கேட்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், “மோடியின் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் பல புகார்கள் அளிக்கப்பட்டாலும், நரேந்திர மோடியை நேரடியாகக் குறிப்பிடாமல் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரே ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் மட்டுமே தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் ஆர்.கலைமதி ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரை முதலில் பதிவுத்துறை மூலம் எண்ணைப் பெறுமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். இந்த மனுவை தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டித் தலைவர் செல்வ பெருந்தகை தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி ஏப்.21ஆம் தேதி இஸ்லாமியர்களுக்கு எதிராக விரும்பதகாத கருத்துக்களை தெரிவித்தார்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“