தொடர் விடுமுறை எதிரொலி: பலமடங்கு உயர்ந்த விமான கட்டணம்!

தொடர் பண்டிகை விடுமுறையையொட்டி மதுரையிலிருந்து புறப்படும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தொடர் பண்டிகை விடுமுறையையொட்டி மதுரையிலிருந்து புறப்படும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
Flight airport

தொடர் பண்டிகை விடுமுறையை ஒட்டி மதுரையிலிருந்து புறப்படும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், விமானப் பயணிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வழக்கமாக பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் உயர்வது போல, இம்முறையும் கட்டண உயர்வு கணிசமாகப் பதிவாகியுள்ளது.

Advertisment

உள்நாட்டு வழித்தடங்களில் கட்டண உயர்வு:

பொதுவாகவே தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை காலங்களில் விமானக் கட்டணம் சுமார் ஐயாயிரம் ரூபாய் வரை உயர்வது வழக்கம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தொடர் விடுமுறையின் எதிரொலியாக, முக்கிய வழித்தடங்களில் விமான டிக்கெட் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.

மதுரை - சென்னை: வழக்கமாக இந்த வழித்தடத்தின் டிக்கெட் விலை ரூ. 5,000 முதல் ரூ. 9,000 வரை இருக்கும். ஆனால், தற்போது பண்டிகை விடுமுறையால் டிக்கெட் விலையில் கூடுதலாக ரூ. 3,000 முதல் ரூ. 6,000 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, வரும் ஐந்தாம் தேதி மதுரையிலிருந்து சென்னை செல்லும் ஒரு டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ. 8,542 ஆகவும், அதிகபட்ச விலை ரூ. 16,072 வரையிலும் சென்றுள்ளது.

மதுரை - பெங்களூரு: சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ. 6,000 வரை விற்கப்பட்ட டிக்கெட்டின் விலை தற்போது அதிகரித்து, ரூ. 20,048 வரை உயர்ந்துள்ளது.

Advertisment
Advertisements

மதுரை - ஹைதராபாத்: வழக்கமான நாட்களில் அதிகபட்சமாக ரூ. 9,000 வரை இருந்த டிக்கெட்டின் கட்டணம் தற்போது ரூ. 15,000 வரை சென்றுள்ளது.

வெளிநாட்டுக் கட்டணங்களிலும் ஏற்றம்:

உள்நாட்டு வழித்தடங்கள் மட்டுமல்லாமல், மதுரையிலிருந்து இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களின் கட்டணமும் கணிசமாக அதிகரித்துள்ளது. துபாய், இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கான விமான டிக்கெட் கட்டணங்களும் இந்தப் பண்டிகைக் கால விடுமுறையால் உயர்ந்துள்ளன.

பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், விடுமுறையைக் கொண்டாடவும் விரும்புவதால், விமான டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த உயர்வான கட்டணங்கள் விடுமுறையில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்குக் கூடுதல் சுமையாக மாறியுள்ளது. விமான நிறுவனங்கள் பயணிகளின் தேவையைப் பயன்படுத்தி கட்டணங்களை உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: