Advertisment

ஏன் இந்த திடீர் மாற்றம்? கொரோனா டெஸ்ட் செய்தாலே 14 நாட்கள் தனிமை!

சில நாட்கள் கழித்து மீண்டும் டெஸ்ட் செய்தால் பாசிடிவ் ஆகலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corono test

corono test

corona test : கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி உத்தரவின் விளக்கம் இப்போது தெரிய வந்துள்ளது.

Advertisment

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று வரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வருகிறது.சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மண்டலங்களில், முழு ஊரடங்கு அமல் படுத்தப்படலாம் என்ற தகவல் வேகமாக கசிந்து வருகிறது.

10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மீண்டும் முழு ஊராடங்கை அமல்படுத்த உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க அமைச்சர்கள் தலைமையிலான குழுக்களும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகரிகளும் நியமிக்கப்பட்டு, தடுப்பு பணிகளை தீவிரமாக மேற் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,நேற்றைய தினம், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் கூறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 30 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மையங்களில் பரிசோதனை செய்யும் நபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டது.

இதுக் குறித்த அச்சங்களும் பீதிகளும் மக்களிடையே வேகமாக பரவிய நிலையில், சென்னை மாநகராட்சி தரப்பில் இதுக் குறித்து முழு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

" சென்னையில் பரிசோதனை செய்யும் தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவர்கள் என்கிற உத்தரவு சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மட்டுமே. இதை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம்.

பொன்விழா ஆண்டில் மூடுவிழா காணும் ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் - சென்னை மக்கள் ஷாக்

தற்போது சென்னையில் 30 பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் விபரங்களை சேகரிப்பது உள்ளிட்ட வழிமுறைகளை உள்ளன. சோதனைக்கு வருபவர்கள் தங்கள் சுய விபரங்களை வழங்குவதோடு அவர்களுடன் கடந்த 15 நாட்களில் தொடர்பில் உள்ளவர்கள் விவரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்

சென்னையில் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 6 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இது பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும். இந்த நடவடிக்கை மூலம் பரவலை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.

பரிசோதனை செய்யும் போது முதலில் நெகடிவ் வரும், சில நாட்கள் கழித்து மீண்டும் டெஸ்ட் செய்தால் பாசிடிவ் ஆகலாம். இதுவே அவர்களை 15 நாட்கள் முழுமையாக தனிமைப்படுத்தி டெஸ்ட் செய்தால் மற்றவர்களுக்கும் பரவாமல் எளிமையாக கட்டுப்படுத்தலாம்” என்று விவரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Greater Chennai Corporation Corona Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment