ஊரடங்குக்கு விரைவில் டாடா : இயல்புநிலைக்கு திரும்ப தயாராகிறது சென்னை

Corona lockdown in chennai : சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளிடம் இருந்து வரி வசூல் நடவடிக்கை ஜூன் மாதம் 30ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

By: May 26, 2020, 1:03:13 PM

சென்னையில், கொரோனா தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு மட்டும் இதற்கு தீர்வாக ஆகாது என்பதை நிர்வாகம் தற்போது உணரத்துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

மார்ச் மாதத்தில் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் தான் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில், கோயம்பேடு சந்தையின் மூலமாகவே,சென்னை அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டது. மே மாதத்தில், சென்னையின் சில பகுதிகளில் மட்டும் கொரோனா தொற்று மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என தொடர்ந்து சென்னையில் தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. சென்னை பெருநகர மாநகராட்ச நிர்வாகத்திற்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சவாலான நடவடிக்கையாகவே தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், வரும் 31ம் தேதியுடன் 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரவுள்ள நிலையில், பொதுமுடக்கத்தை விலக்கிக்கொள்வதா அல்லது சில தளர்வுகளுடன் நீட்டிப்பதா என்பது தொடர்பாக, மருத்துவக்குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னையில் மார்ச் 18ம் தேதிதான், முதல் தொற்று கண்டறியப்பட்டது. மார்ச் 24ம் தேதி்க்குள் இதன் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்தது. ஏப்ரல் மாத முடிவில் இதன் எண்ணிக்கை 902 ஆக அதிகரித்தது. தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் 11,131 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

வைரஸ் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளது. ஊரடங்கு நடவடிக்கையினால் மட்டுமே வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்திவிட முடியாது என்று தேசிய தொற்றுநோயியல் மையத்தின் தலைவர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் முலியில் தெரிவித்துள்ளார்.

சென்னையில், கொரோனா சோதனைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொடர்பு தடமறிதல் நிகழ்வும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால்கள், சமூக நிகழ்வுகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவைகள் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளிடம் இருந்து வரி வசூல் நடவடிக்கை ஜூன் மாதம் 30ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதிக்கு பிறகும், அவர்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஆன்லைன் முறையிலேயே வரி செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய்) மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு எந்நேரத்திலும் தளர்த்தப்பட்டாலும் அல்லது பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டாலோ, உடனடியாக இயக்க 3100 பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள் பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. கோயம்பேடு உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்களில், மக்கள் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்பட்டால், அதில் 50 சதவீத பயணியரே அனுமதிக்கப்படுவர் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus lockdown tamilnadu chennai bus services public transport

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X